குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு: வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது

மதுரை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.  குரூப் 4 முறைகேட்டை அவசர வழக்காக விசாரிக்க வழக்கறிஞர்கள் நீலமேகம் மற்றும் முகமது ரஸ்வி ஐகோர்ட் மதுரை கிளையில் முறையிட்டனர். குரூப் 4 முறைகேடு தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தல் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்து.

முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்துள்ள தேர்வாணையம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத தடை விதித்துள்ளது. குரூப்-4 தேர்வில் பணிக்கு ஏற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அலுவலக உதவியாளர், சுருக்கெழுத்தர் போன்ற பணிக்கு 5 லட்சம் ரூபாயும், கிராம நிர்வாக அதிகாரி பணிக்கு எட்டு லட்ச ரூபாய் வரையிலும் வசூல் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. பணிக்கு ஏற்றவாறு பணம் வசூல் செய்யப்பட்டு, அதற்கு ஏற்றவாறு மதிப்பெண்கள் போடப்பட்டு தரவரிசை பட்டியலில் இடம்பெற வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது வரை  சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி., ஊழியர் ஓம்காந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முகமது ரஸ்வி என்பர் முறையீடு செய்துள்ளார். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும் அவர் மனுவில் குறிபிட்டுள்ளார். இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விரைவில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


Tags : branch ,Icourt ,CBI ,Group 4 ,Igor Branch ,investigation , Group 4 abuse, CBI, Icort branch, arrested
× RELATED நெல்லையில் நடைபெற உள்ள அமமுக பொதுக்கூட்டத்துக்கு ஐகோர்ட் கிளை அனுமதி