×

தமிழகத்தை உலுக்கிய குரூப் 4 தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை அதிரடியாக கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்

கடலூர்: டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு  நடத்திய குரூப் 4 தேர்வில் மோசடி நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில்  விஐபி தரகர்கள் மற்றும் உயரதிகாரிகள்  ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரம்   திருக்குமரன் (35), தேர்வில் மோசடியாக வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் (21), ஆவடி வெங்கட்ரமணன் (38), திருவாடனை கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), பண்டிருட்டி சிறு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26),   ஆவடி கவுரிபேட்டை காலேஷா (29), டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் பழைய வண்ணாரப்பேட்டை ஓம் காந்தன் (45), தேனி சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ் (45) கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியை சேர்ந்த  சீனுவாசன்(33) என மொத்தம் 10 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள்  தமிழகம் முழுவதும் நெட்வொர்க் வைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் பல ஆண்டுகளாக செய்து வந்தது தெரியவந்தது.

இந்த முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள திருவல்லிக்கேனியை சேர்ந்த ரமேஷ் (39), பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் செயல்பட்டு வரும், தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் நிர்ணய கமிட்டியில் பணியாற்றியவர். அதே வளாகத்தில்  செயல்பட்டு  வரும் எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன் (35) ஆகிய இருவரையும் பள்ளி கல்வித்துறை இயக்ககம் நேற்று காலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த  வழக்கில் தொடர்புடைய சிவராஜ் தப்பி ஓடி விட்டனர்.

அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்த்த சிவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.தலைமறைவாக இருந்தவரை செல்போன் சிக்னல் மூலம்  பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ராஜசேகர், சீனுவாசன் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நபர் சிவராஜ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : selection scandal ,Group 4 ,Tamil Nadu ,CBCID ,headscarf , Group 4 selection scandal that rocked Tamil Nadu: Criminal arrest of another headscarf
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...