ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை: ஆவணகாப்பகம், வரலாற்று ஆய்வு பிரிவில் இருந்த அபூர்வா உயர்கல்வித் துறை முதன்மை செயலாளராகவும், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக இருந்த மங்கட்ராம் சர்மா ஆவண காப்பகம், வரலாற்று ஆய்வு பிரிவுக்கும், அரசு உள்துறை இணை செயலாளராக மணிகண்டன் மாற்றப்பட்டுள்ளார். ரவிச்சந்திரனுக்கு மாற்றாக உள்துறை மற்றும் கலால் மற்றும் சுங்கப் பிரிவு இணை செயலாளராகிறார்.

பைபர் நெட் ஆணைய மேலாண்மை இயக்குநராக இருந்த சண்முகம் அருங்காட்சியம் ஆணையராகவும், வழிகாட்டுப் பிரிவு செயல் இயக்குநராக இருந்த கார்த்திகேயன் தொழில் மேம்பாட்டு துறை கழகத்திற்கும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக செயல் இயக்குநராக இருந்த அனிஷ்சேகர் வழிகாட்டுப் பிரிவு செயல் இயக்குநராகவும், தகவல் தொழில் நுட்ப பிரிவு முதன்மை செயலாளர் மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் பாபு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழக தலைவராக நீடிப்பார். மேலும் உள்துறை மற்றும் கலால் துறை துணை செயலர் ரவிச்சந்திரன் பைபர் நெட் துறை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : IAS officers ,IAS , IAS, Officers, Workplace Transfer
× RELATED ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணியை 5 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு