நிகில் குமாரசாமிக்கு மே மாதம் திருமணம்

பெங்களூரு: மாஜி முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கு வரும் மே மாதம் திருமணம் நடைபெறுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பாவின் அண்ணன் பேத்தியை நிகில் குமாரசாமி மணக்கிறார். முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் மஜதவின் இளைஞர் அணி பிரிவு மாநில தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நிகில் குமாரசாமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு விஜயநகர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.கிருஷ்ணப்பாவின் அண்ணனின் பேத்தியான ரேவதியை நிகில் மணக்கிறார். வரும் மே 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் நிகில்-ரேவதி திருமணம் நடைபெறுகிறது.


Tags : Nikhil Kumaraswamy , Nikhil Kumaraswamy, married in May
× RELATED சோனியா காந்திக்கு அழைப்பு இல்லை:...