டி.வி.அந்தோணி மறைவு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவருமான டி.வி.அந்தோணி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை, அடையாறு காந்திநகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நேற்று காலை மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மத்திய சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: