தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிய வீரர்களின் குழந்தைகளுக்கு சலுகை: சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: தீவிரவாதம் மற்றும் நக்சல் தீவிரவாதத்துக்கு எதிராக போராடிய பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதுவதில் சில சலுகைகளை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின் அதில் பலியான பாதுகாப்பு படையினரின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ கடந்தாண்டு சில விதிமுறைகளை தளர்வு செய்திருந்தது. அதை இந்தாண்டும் தொடர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. தீவிரவாதம் மற்றும் நக்சல் தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் ராணுவ வீரர்களின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களை அவர்கள் ஒரே நகரத்துக்குள்ளோ அல்லது வேறு நகரங்களுக்கோ மாற்றிக் கொள்ளலாம். செய்முறை தேர்வை அவர்கள் தவறவிட்டிருந்தால், தங்கள் வசதிப்படி ஏப்ரல் 2ம் தேதிக்குள் செய்முறை தேர்வு நடத்தப்படும்.
ஏதாவது பாடத் தேர்வை பிறகு எழுத நினைத்தாலும் அதற்கும் அனுமதிக்கப்படும். இது தொடர்பான வேண்டுகோள்களை மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாக தெரிவிக்க வேண்டும். பின்பு, அவை சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்துக்கு அனுப்பப்படும். இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Tags : War Heroes Against Terrorists for Concession , Terrorist, struggling warrior, child, concession, CBSE, announcement
× RELATED வடகிழக்கு டெல்லியில் வன்முறை...