சிறுமியின் வயிற்றில் இருந்த அரை கிலோ தலைமுடி அகற்றம்

கோவை: கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 13 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்படுவதாக கூறி அனுமதிக்கப்பட்டார். சிறுமியை டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் தலைமுடி, ஷாம்பு பாக்கெட், பிளாஸ்டிக் ெபாருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து  மருத்துவர்கள் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த அரை கிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வெளியே எடுத்தனர்.    இது குறித்து மருத்துவமனை டாக்டர்கள் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, தனது தாய் மாமன் இறந்ததால் மன அழுத்தத்தால் அவற்றை சாப்பிட்டதாக சிறுமி கூறியுள்ளார்.


Tags : Removal , Little girl, hair
× RELATED சத்துணவில் வெங்காயம், பூண்டு நீக்கம் கண்டித்து ஆர்ப்பாட்டம்