டெல்டா விவசாயிகள் சங்கம் தொடர்ந்தது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: விவசாயத்தை பெரிதும் பாதிக்கும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க ேகாரி தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதியோ அல்லது மக்களின் கருத்தை கேட்கவோ தேவையில்லை என்ற அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் இது குறித்து கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கடந்த 16ம் தேதி வெளியிட்ட தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் காவிரி டெல்டா பகுதியில் முற்றிலுமாக விவசாயம் முடங்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையை உருவாக்கும். அதனால் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதித்து, அதனை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தவிர விவசாயிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை கேட்காமல் இதுபோன்ற மத்திய அரசின் திட்டம் என்பது சட்டவிரோதமானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் எனத் தெரி

Related Stories: