பொள்ளாச்சி சம்பவம்போல நாகையில் சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சித்ரவதை: செல்போன் கடை ஊழியர், நண்பர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை: பொள்ளாச்சி சம்பவம் போல், நாகை அருகே சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செல்போன் கடை ஊழியர், நண்பர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்து அதை வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் மீண்டும் செக்ஸ் சித்ரவதை செய்து பணம் பறித்த சம்பவம் நாட்டேயே உலுக்கியது.  பொள்ளாச்சியில் நடந்த இந்த கொடூர சம்பவம் போல, நாகை மாவட்டத்திலும் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் வருமாறு:  மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் (25). சென்னையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். அவ்வப்போது இவர் ஊருக்கு வந்து சென்ற போது அருகில் வசிக்கும் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி  வலையில் வீழ்த்தியுள்ளார்.

Advertising
Advertising

சிறுமியின் தந்தை நோய்வாய்பட்டவர் என்பதால் அடிக்கடி பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தனர். இதை பயன்படுத்தி சந்தோஷ் சிறுமியின் வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தது மட்டுமின்றி, அந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து உள்ளார். இதை அந்த சிறுமியிடம் காட்டி மயிலாடுதுறை வரும் போதெல்லாம் மிரட்டி உல்லாசம் அனுபவித்து உள்ளார். கடந்த 2018 டிசம்பர் முதல் மாதந்தோறும் இந்த சம்பவம் நடந்து உள்ளது. கடந்த மாதம் ஊருக்கு வந்த சந்தோஷ், சிறுமியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை தனது நண்பர் அக்கலூர்நகர் காலனியை சேர்ந்த கண்ணன்(36) என்பவரிடம் கொடுத்து உள்ளார். அந்த வீடியோவை செல்போனில் பதிவு செய்து கொண்ட கண்ணன், அதை எடுத்துக்கொண்டு வீட்டு உபயோக பொருள் விற்க செல்பவர் போல சென்று சிறுமியிடம் வீடியோவை காட்டி தனக்கும் உடன்படும்படி கூறி மிரட்டி உள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுத்து விட்டார்.

கடந்த 23ம் தேதி வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது பட்டப்பகலில் வீடுபுகுந்த கண்ணன் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சிறுமி கத்தி கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மயிலாடுதுறை மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சந்தோஷ், கண்ணன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பொள்ளாச்சி சம்பவத்தை போலவே மயிலாடுதுறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: