ஆம்பூர் அருகே கள்ளச்சாராயம் குடித்த தொழிலாளி பரிதாப சாவு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே சின்னகொம்மேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ெஜயசீலன்(60). கூலித்தொழிலாளி.  இவர் நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியில் கள்ளத்தனமாக புதர்மறைவில் விற்கும் சாராயத்தை வாங்கி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயசீலன் பரிதாபமாக இறந்தார். அப்பகுதியினர் கூறுகையில், ‘பேரணாம்பட்டு, மேல்பட்டி, சென்டத்தூர், பல்லலகுப்பம் பகுதிகளில் இருந்து சிலர் கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்கின்றனர். இதற்காக கமிஷன் அடிப்படையில் ஏஜென்ட்களும் செயல்படுகின்றனர். இந்த கள்ளச்சாராயம் குடித்ததால் தான் ஜெயசீலன் இறந்துவிட்டார்’ என குற்றம் சாட்டினர்.

Tags : death ,Parambaba ,smuggler ,Ambur Ambur , Ambur, counterfeit, worker dies
× RELATED ஆதம்பாக்கம் தனியார் வங்கியில் போலி...