×

பதிவுத்துறையில் வருவாய் குறைந்தது எப்படி? ஐஜி, டிஐஜிக்களுடன் ஆலோசனை

சென்னை: பதிவுத்துறை வருவாய் குறைந்தது எப்படி என்பது ெதாடர்பாக ஐஜி ஜோதி நிர்மலா சாமி அனைத்து மண்டல டிஐஜிக்களுடன் ஆலோசனை நடத்தினார். பத்திரப்பதிவுத்துறையின் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டில் 13,123 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை பதிவுத்துறை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடி உடனுக்குடன் சரி செய்யப்படாததால் பத்திரபதிவின் வேகம் குறைந்தது. மேலும், பதிவு கட்டணமும் அதிகமாக இருப்பதால் விற்பனை பத்திரம், தானம், செட்டில்மென்ட் பத்திரபதிவும் குறைந்து விட்டது. இதனால் நடப்பாண்டில் 7 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் அடைய முடிந்துள்ளது. இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் ₹6 ஆயிரம் கோடி வருவாய் எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டில் வருவாய் குறைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்ேபாது, நடப்பாண்டில் வருவாய் குறைந்தது எப்படி, இந்த வருவாயை பெருக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது ெதாடர்பாக அவர் டிஐஜிக்களிடம் கேட்டறிந்தார். அப்போது, புதிதாக கடந்த 2012ல் வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வந்தது. அதன்பிறகு 8 ஆண்டுகளான நிலையில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படாமல் உள்ளது.
எனவே, அதை உயர்த்த வேண்டும் என்று டிஐஜிக்கள் சிலர் தெரிவித்தனர்.

சிலர் ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடியால் பதிவு குறைந்ததாக டதெரிவித்தனர். மேலும், உயர் மதிப்பு ஆவணங்கள் குறைவாக இருப்பதாலேயே வருவாய் குறைந்தது என்று தெரிவித்தனர். அப்போது, பதிவுத்துறை ஐஜி அதிகளவிலான நிலுவை ஆவணங்களை பதிவு செய்து விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.  இதைதொடர்ந்து, வரும் 31ம் தேதி அனைத்து சார்பதிவாளர்களுடன் பதிவுத்துறை ஐஜி ஆலோசனை நடத்துகிறார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : DIGs ,IG , Registration Department, IG, DIG
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...