ஆப்கனில் பயணிகள் விமானம் விபத்து : 83 பயணிகள் கதி என்ன?

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் 83 பயணிகள் கதி என்ன என்று தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமான அரைனா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று 83 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. பிற்பகலில் அந்த விமானம் காஸ்னி மாகாணத்தின் இந்துகுஷ் மலைப்பகுதிக்கு மேலே சடோகல் பகுதியில் பறந்துக் கொண்டிருந்தது. தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பிற்பகல் 1.10 மணியளவில் திடீரென அந்த விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்தில் சிக்கியது.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதனால் விமானத்தில் சென்ற 83 பேர் கதி என்ன ஆனது என்பது உடனடியாக தெரியவில்லை. முன்னதாக கடந்த 2005ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் வர்த்தக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. அங்குள்ள மேற்கு ஹெராத் பகுதியில் இருந்து தலைநகர் காபூல் நோக்கி சென்றபோது மலைப்பகுதியில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்தில் சிக்கியது. இதேபோல் கடந்த 2013ல் அமெரிக்க போயிங் விமானம் ஒன்று காபூலில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு சரக்கு ஏற்றி சென்றபோது விபத்தில் சிக்கியது. இதில் விமான ஊழியர்கள் 7 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்தான் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

Related Stories: