ஈராக் அமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட்களை ஏவி தாக்குதல் : ஈரான் மீது குற்றச்சாட்டு

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று முன்தினம் இரவு திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இரவு 7.30 மணியளவில் தூதரகத்தில் உள்ள உணவகம் மீது ராக்கெட் ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து மேலும் 2 ராக்கெட்கள் அங்கு விழுந்து வெடித்து சிதறின. இதில் தூதரகத்தில் இருந்த ஒருவர் காயம் அடைந்ததாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் அமெரிக்கரா, ஈராக் அதிகாரியா என்பது பற்றியும் காயத்தின் தன்மை குறித்தும் எந்த தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இத்தாக்குதலை ஈரான் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

Tags : Iraq ,embassy ,US , US Calls On Iraq , Protect Baghdad Embassy,Rocket Attack
× RELATED பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை...