தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் பணம் பறித்த பெண் சிக்கினார்

தாம்பரம்: தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் அடிக்கடி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை பேருந்து நிலையத்தில் சந்தேகிக்கும்படி நின்றுகொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரித்த போது, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா (20) என்பதும், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

* ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான அயனாவரத்தை சேர்ந்த கண்ணன் (38) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

* அரும்பாக்கம் வேல்முருகன் காம்ப்ளக்ஸ் வாட்டர் டேங்க் ரோடு அய்யாவு காலனி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த, சூளைமேடு பஜனை கோயில் 6வது தெருவை சேர்ந்த கணேஷ் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 மது பாட்டில்கள், ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

* பழைய வண்ணரப்பேட்டை ஸ்டான்லி பணியாளர் குடியிருப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரவணன். இவரது மனைவி ரம்யா (24), தனது மகன் ரிஷித்துடன் நேற்று வீட்டில் இருந்து மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* பெரம்பூர் பி.பி. ரோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பெரியசாமி (51) நேற்று நந்தம்பாக்கம் பகுதிக்கு சவாரி வந்தபோது மாரடைப்பால் மயங்கி விழுந்து இறந்தார்.

* பரங்கிமலை மாங்காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ் - பாஞ்சாலி தம்பதியின் மகன் மிகாவேல் (5), நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மாயமானான். இந்நிலையில், புனித பேட்ரிக் தேவாலய வளாகத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

* சென்னை எம்கேபி நகர் உதயசூரியன் நகரை சேர்ந்த பாஜ பிரமுகர் உருது கமல் (55) என்பவர், ஓட்டேரி தாசமகான் பகுதியில் உள்ள வெள்ளை மசூதி அருகே குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து துண்டு பிரசும் வழங்கியபோது, அதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், ஓட்டேரி தர்கா தெருவைச் சேர்ந்த அப்துல் மஜீத் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: