மத்திய அரசுக்கு சொந்தமான கன்டெய்னர் யார்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மத்திய அரசுக்கு சொந்தமான கன்டெய்னர் யார்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. எண்ணூர் விரைவுச் சாலையில் மத்திய அரசுக்கு சொந்தமான கண்டனர் பெட்டிகளை பாதுகாத்து வைக்கும் யார்டு உள்ளது. இந்த கன்டெய்னர் யார்டில்  நேற்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். அப்போது அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடியவர்கள் யார் என்று  விசாரணை செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: