மும்பையில் மே 24ல் ஐபிஎல் பைனல்

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 2020 சீசன் இறுதிப் போட்டி மும்பையில் மே 24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று கூறுகையில், ‘எதிர்வரும் ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறும். இறுதிப் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது. போட்டிகள் மாலை 4.00 மற்றும் இரவு 8.00 மணிக்கு தொடங்கும். அதில் மாற்றம் ஏதும் இல்லை. இம்முறை 5 நாட்களில் மட்டுமே 2 போட்டிகள் நடக்க உள்ளன. வீரர்கள் தலையில் பந்து தாக்கி மூளை அதிர்ச்சி அடைய நேரிட்டால் மாற்று வீரர் அனுமதிக்கப்படுவார். 3வது நடுவர் நோ பால் வழங்கவும் அனுமதிக்கப்படும்’ என்றார்.

Tags : Mumbai ,IPL Final , IPL Final , May 24, Mumbai
× RELATED ஐஎஸ்எல் அரையிறுதியில் யார் மும்பை-சென்னை இன்று மோதல்