பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக்கரசு(27), மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. 5 பேரும் கோவையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்ததால், சேலம் மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிஜேஎம் கோர்ட்டில் நீதிபதி ரவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Pollachi ,sex case trial , Pollachi, sex case, trial, adjournment
× RELATED மாற்றுத்திறனாளிகள் முகாம் ஒத்திவைப்பு