×

நெல்லை கலெக்டர் ஆபீசுக்கு வந்தவர் அலப்பறை ராணுவத்துக்கே ரூ.1 கோடி டொனேஷன் தந்திருக்கேன்

நெல்லை: நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்நாள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (52) என்பவர் கையில் பையுடன் வந்தார். பாதுகாப்புக்கு நின்ற போலீசார், சசிகுமாரை சோதனையிட்ட போது அவரது பையில் பெரிய வெட்டரிவாள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவரை அப்படியே தூக்கி அருகிலுள்ள காவல் அறைக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் நான் ராணுவத்திற்கே ஒரு கோடி ரூபாய் நிதி அளித்தவன். என்னை ஏன் சார் ரொம்ப கேள்வி கேட்கறீங்க என அதட்டினார்.

போலீசாருக்கு கிறுகிறுத்துப் போச்சுது. இதையடுத்து அவர் வைத்திருந்த பையில் ஒரு மனு இருந்தது. அதில் ‘‘நான் அனைத்து மாநில காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளேன். நெல்லை மாவட்ட மக்களுக்கு நன்னடத்தை செய்ய எனக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அர்த்தம் புரியாமல் போலீசார் திகைத்தனர். அரிவாளை இங்கு எதற்கு கொண்டு வந்தீர்கள் எனக்கேட்டபோது சசிகுமார், அது எங்க வீட்டுல பயன்படுத்துறதுக்குங்க என்றார். இதையடுத்து அரிவாளை வாங்கி வைத்துக் கொண்ட போலீசார், இனிமேலும் அவரிடம் விசாரணை நடத்தினால் பிரஷர் ஏறிவிடும் எனத்தெரிந்து, கடுமையாக எச்சரித்து வெளியே அனுப்பினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Alapparai Army , Paddy, Collector's Office, Laundry, Army, Rs. 1 crore, Donation
× RELATED 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு…