சங்கராபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை துவங்கியது: ஒரு கிலோ ரூ60க்கு விற்பனை

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தொடங்கியது. ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. சங்கராபுரம்  பகுதி அதிக அளவில் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் இந்த  ஆண்டு அதிக அளவில் சின்னவெங்காயம் பயிரிட்டிருந்தனர். தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. விளைச்சல் நன்றாக இருக்கும் நிலையில் விலையும் உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மூத்த விவசாயி பாண்டுரங்கன் கூறுகையில்  இந்த ஆண்டு சின்னவெங்காயம் அதிக விலைபோகிறது.

Advertising
Advertising

கடந்த ஆண்டு ஒரு கிலோ சின்னவெங்காயத்தின் விலை 20 முதல் 40 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு இதன் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதனால் சின்னவெங்காயம் பயிரிட்ட  விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. மேலும்  அறுவடை அதிகமாகும் போது விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories: