பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து

சென்னை: பத்ம விருதுகளுக்கு தேர்வான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், வேணு சீனிவாசன் உள்ளிட்டோருக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தலைவர் வேணுசீனிவாசன், சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகசேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், நாதஸ்வர இசைக்கலைஞர் காலீ ஷாபி மெகபூப்க்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து கூறியுள்ளார். கர்நாடக இசை பாடகர்கள் லலிதா, சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ்க்கு ஆளுநர் வாழ்த்து கூறியுள்ளார். நாதஸ்வர கலைஞர் ஷேக் மெகபூப் சுபானி, பேராசிரியர் பிரதீப் ஆகியோருக்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

Tags : Banwarl , Padma Award
× RELATED சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு