மனு கொடுக்க அரிவாளுடன் வந்த கருங்கல் காங்கிரஸ் பிரமுகர்: நெல்லை கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

நெல்லை: குமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (52). இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் சில மனுக்களுடன் வந்தார். அப்போது சசிகுமாரை போலீசார் சோதனையிட்டனர். அவரது பையில் வெட்டரிவாள் இருப்பது தெரிய வந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை அருகில் உள்ள காவல் அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தார். ராணுவத்திற்கு ஒரு கோடி நிதி அளித்ததாகவும் கூறினார். தொடர்ந்து கலெக்டரிடம் அளிக்க வந்த மனுவை வாங்கி விசாரித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:- நான் அனைத்து மாநில காங்கிரஸ் உறுப்பினராக உள்ளேன். நெல்லை மாவட்ட மக்களுக்கு நன்னடத்தை செய்ய எனக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டு இருந்ததற்கான அர்த்தம் தெரியாமல் போலீசார் திகைத்து போய் நின்றனர். அப்போது சசிகுமார், அரிவாளை வீட்டு உபயோகத்திற்கு கொண்டு வந்ததாக கூறினார். இதையடுத்து அரிவாளை பெற்று கொண்ட போலீசார், அவரை வெளியே அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Karunagal Congress ,collector ,Rice , Petition, Karunagal Congress, Paddy
× RELATED மாதவிலக்கின் போது சமைக்கும்...