ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து: விமானத்தில் பயணித்த 83 பேரின் நிலை?

காஸ்னி: ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று கஸ்னி மாகாணத்தில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று கஸ்னி மாகாணத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து இன்று காலை 83 பயணிகளுடன் காபூல் நோக்கி ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது காஸ்னி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விமானத்தில் பயணித்தவர்கள் நிலை என்ன என்று குறித்து விவரம் இன்னும் வெளியாகவில்லை. விமானம் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ்  உள்ள பகுதியில்  விபத்துக்குள்ளானதாகவும், ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகள் விபத்துக்குள்ளான இடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் கடந்தாண்டில் விமான விபத்துகள் பாதியாக குறைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 13 விமான விபத்துகளில் 534 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், கடந்தாண்டு மொத்தம் 8 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 257 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: