×

நிலவின் மர்மப் பகுதியின் அழகான புகைப்படத்தை வெளியிட்டது Chang'e

நிலவின் மர்மமான பகுதி எனப்படும் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தாத தொலைவுப் பகுதியை ஆய்வு செய்வதற்கான முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் Change 4 மற்றும் Yutu 2 Rover என்பவற்றினை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கியிருந்தது.இந்நிலையில் குறித்த பகுதியினை Change 4 ஆனது மிகவும் அழகாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

12 நிலவு நாட்களாக எடுக்கப்பட்ட புகைப்படங்களையே இவ்வாறு வெளியிட்டுள்ளது.இதேவேளை ரோவர் 180 கிலோ மீற்றர்களுக்கு குறுக்காக இதுவரை 350 மீற்றர்கள் நகர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இதுவரை வேறெந்த ரோவர்களும் இப் பகுதிக்கு வெற்றிகரமாக பயணம் செய்ததில்லை என்பது குறிப்பிடித்தக்கது.

Tags : Chang'e ,moon , Chang'e has released a beautiful photo of the moon's mystery
× RELATED ஆயுதங்களுடன் இரவு நேரத்தில் கொள்ளை...