×

யானை மருத்துவமனை

நன்றி குங்குமம் முத்தாரம்

ஆசியாவின் மொத்த யானைகளில் 50 முதல் 60 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன. இந்த யானைகளைப் பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு இந்தியாவிடம் இருக்கிறது. காடுகள் அழிந்துவருவதால் தங்களின் வாழ்விடங்களை இழந்து வரும் யானைகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றன. வாகனங்களில் மோதி அடிபடுகின்றன; சில யானைகள் இறந்தும் விடுகின்றன.

அப்படி அடிபடும் யானைகள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட யானைகளைக் குணப்படுத்த ஆக்ராவிற்கு அருகில் பிரத்யேகமாக யானை மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச வனத்துறை யுடன் இணைந்து செயல்படும் இந்த மருத்துவமனை இந்தியாவின் முதல் யானை மருத்துவமனை.

ஒயர்லெஸ் எக்ஸ்ரே, லேசர் கிசிச்சை, அல்ட்ரா சோனோகிராபி, ஹைட்ரோதெரபி என பல வசதிகள் யானைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 12 ஆயிரம் சதுர அடியில் பரந்து விருந்திருக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் யானைகளைக் கண்காணிக்க அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

Tags : Elephant Hospital , Elephant Hospital
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...