×

கிளி மனிதன்

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகமெங்கும் செல்லப் பிராணிகளை  நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். தங்களின் குழந்தைகளுக்கு இணையாக நாய்களையும், பூனைகளையும், கிளிகளையும் வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் டெட் ரிச்சர்ட்ஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த செல்லப்பிராணி
களின் வெறியரான இவர் ஒரு கிளி பைத்தியம்.

வீட்டில் எக்கச்சக்கமான கிளிகளை வளர்க்கிறார். வேறு எதையும் விட நேரத்தைக் கிளிகளுடன் செலவிட்டு வந்த இவர், ஒரு கட்டத்தில் கிளியாகவே மாறிவிட்டார். இந்தச் சம்பவத்தை உலகமே புருவத்தை உயர்த்திப் பார்த்தது. ஆம்; கிளியைப் போல தன் உருவத்தை மாற்றிக்கொள்ள காதுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிட்டார் இந்த கிளி மனிதன்.

தவிர, இவர் டாட்டூ பிரியரும் கூட. நாற்பது வருடங்களுக்கு முன்பே உடலில் டாட்டூ வரைந்திருக்கிறார். அந்த டாட்டூக்கள் எல்லாமே கிளியைப் பிரதிபலிப்பவை. பஞ்சவர்ணக் கிளியைப் போலவே முகம் முழுவதும் சிவப்பு, பச்சை வண்ணங்களை டாட்டூவாக குத்தியிருக்கிறார். இந்த டாட்டூவே இவரது அடையாளமாக மாறிவிட்டது.



Tags : parrot man , The parrot man
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்