×

கோவையில் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

கோவை:  கோவை சிங்காநல்லூர் தொழிலதிபர் ஆதம்ஷா என்பவரின் வீட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த ஆதம்ஷா, கோவை சிங்காநல்லுரில் வசித்து வருகிறார். பட்டணப்பகுதியில் இன்ஜினீயரிங் கம்பனி வைத்திருக்கும் ஆதம்ஷா கடந்த 24ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய ஆதம்ஷா வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களையும் உடைத்து அதிலிருந்த 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலீஸாரிடம் வழக்கு பதிவு செய்த பின்னர் போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களின் கைரேகையை வீடு முழுவதும் தேடி ஆராய்ந்து வருகின்றனர். பின்னர் அந்த வீட்டில் சிசிடிவி இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள, வீடுகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே இதுபோன்ற கொள்ளை சம்பவம் அங்கு நடந்திருக்கிறது. மேலும் இக்கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags : businessman ,house ,Coimbatore. 100 ,Coimbatore , Coimbatore, businessman, jeweler
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்