தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் அடித்து உதைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

சென்னை: தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் கூட்டி வந்து அடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். முதலில் தமிழகத்துக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த திருமண வரவேற்பு நிகழ்விலே மணமக்களை வாழ்த்தி பேசிய ஸ்டாலின், பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக கூறியிருந்தார். குறிப்பாக பெரியார் குறித்தும், மத்திய மாநில அரசுகள் உறவுகள் குறித்தும், பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து மணமகன், மணமகள் இருவரும் வீட்டில், மத்திய - மாநில அரசு போன்று அமைதியாக இருக்கக் கூடாது, கேள்வி கேட்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதை எதிர்ப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரே குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிறார் எனவும் குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். முதலில் தமிழகத்துக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதிமுக ஆட்சி கொள்ளையடிக்கும் ஆட்சி, கமிஷன் வாங்கும் ஆட்சி எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு அடங்கும் தமிழக அரசை போல் மணமக்கள் இருக்கக் கூடாது எனவும் அவர்  கூறியுள்ளார்.

Related Stories: