விளையாட்டுத்துறைக்கு பேரிழப்பு: கூடைப்பந்தாட்ட வீரர் கோப் மறைவுக்கு ச.ம.க.தலைவர் சரத்குமார் இரங்கல்

சென்னை: அமெரிக்காவின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பீன் பிரயன்ட் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். கோப் மறைவு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கூடைப்பந்தாட்ட ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் the black mamba கோப் அவர்களின் மறைவு விளையாட்டுத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த அவரது 13 வயது மகள் கியான்னா உட்பட 9 பேருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், கோபின் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.Tags : Sarathkumar ,CMC ,demise ,basketball player ,Death ,Cobb Sports Disaster ,CMK , Sports Disaster: CMK leader Sarathkumar condoles basketball player's death
× RELATED பருவநிலை மாற்ற குழு முன்னாள் தலைவர் ஆர்.கே.பச்சோரி திடீர் மறைவு