புதிய தொழில் தொடங்க 7 நாட்களுக்குள் அனுமதி: மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தகவல்

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதிய தொழில் தொடங்க 7 நாட்களுக்குள் அனுமதி வழங்க வகை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார். பல்வேறு துறை அனுமதியை பெற பல நாட்கள் அலைச்சலும், ஆவணப் பணிகளும் இருப்பதால் தொழில்களை தொடங்க மாதக் கணக்கில் தாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்நாத், புதிய சட்டத்தின்படி விண்ணப்பித்து 7 நாட்களுக்குள் அனைத்து வகை அனுமதிகளும் வழங்கப்படத் தவறினால், அனுமதி வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் மாநிலத்தில் தொழில்கள் அதிகரித்து வேலை வாய்ப்பு பெருக வாய்ப்பு ஏற்படும் என்ற அவர், 70 சதவீத வேலை வாய்ப்புகள் மாநில இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

Related Stories: