×

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை:  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நீடிக்கும் இந்த நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டமானது தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியென்பது 10 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியானது 2 கட்டமாக நடத்தப்பட இருக்கிறது. ஏப்ரல் மாதம் தொடக்கி செப்டெம்பர் மாதத்திற்குள்ளாக நடத்தி முடிக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரையில் கோடைக்காலம் முடிந்த பிறகு ஜூன் மாதம் தொடக்கி ஜூலை மாதம் 15ம் தேதிக்குள்ளாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நடத்தி முடிப்பதற்காகவும் தமிழக அரசானது திட்டமிட்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக முடிப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர், ஆர்.பி. உதயக்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு மூத்த அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டமானது பிற்பகல் 1 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியென்பது உலகத்திலேயே மிகப்பெரிய பணியாக கருதப்படுகிறது. கடந்த காலங்களை பொறுத்த வரையில் காகிதமுறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது தற்பொழுது முதல் முறையாக டிஜிட்டல் செல்போன் செயலி மூலமாக,  இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கிறது.  

இந்தியா முழுவதும் 2 கட்டமாக நடைபெறக்கூடிய இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை பொறுத்தவரையில் முதற்கட்டமாக ஒரு தனி நபருக்கு வீடுகள் எத்தனை இருக்கிறது?, அவர்களுக்கான இடங்கள் மற்றும் நிலங்கள் உட்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்படவுள்ளது.  இதன் பிறகு 2ம் கட்டமாக நடத்தப்படக்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒரு வீட்டில் எத்தனை நபர்கள் தங்கி இருக்கின்றன?, அவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறதா? அவர்களின் வசதி என்ன? அவர்களுக்கு இருக்கக்கூடிய குழந்தைகள் எத்தனை? என இதுபோன்ற 32 கேள்விகள் அடங்கிய  பதிவேடு தொடர்பாக வருகின்ற ஜூன் மாதம் முதல் பணி தொடங்க இருக்கிறது. இந்த திட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக, என்னமாதிரியான நடைமுறைகள் சாத்தியப்படுத்துவது என ஆலோசிக்கும் கூட்டம்தான் இன்று நடைபெற இருக்கிறது.


Tags : Edappadi Palanisamy ,meeting ,National Census , Census, Census, Chief Minister, Edappadi Palanisamy, Chief Secretariat, Advisory Meeting
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...