×

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்கு தடை கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: தொல்லியல்துறையின் அனுமதியை முறையாக பெறாததால் தஞ்சை பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழாவை நடத்த தடை கோரிய வழக்கு நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலினுடைய குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும். தமிழில் தான் வேதங்கள் ஓதப்படவேண்டும் என்பது கோரி பல வழக்குகள் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருந்திருக்கிறது. இந்த நிலையில் இன்று தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கே தடை செய்ய வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு ஒரு முறையீடாக வைத்தார்.

ஏனெனில் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. எனவே குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த கோவிலானது தொல்லியல் துறையின் சின்னமாக விளங்குகிறது. ஆகவே இந்த குடமுழுக்கு விழாவை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரினார். இதனை தொடர்ந்து, அதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தஞ்சை பெரிய கோயில் வழக்குகள் ஒத்திவைப்பு:

இதற்கிடையில், அரசு தரப்பில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்குகளை நாளை பட்டியலிடுமாறு கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்குகளை நாளை ஒத்திவைத்துள்ளனர். இது தவிர மைலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ், தஞ்சை பெரியகோயில் இந்து ஆலயம். ஆகவே, தேவ பாஷையான சமஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. தமிழ்தேச பொதுவுடைமை கட்சியின் தலைவர் மணியரசன் தரப்பிலும், தமிழிலேயே குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளைக்கு பட்டியலிடுகிறோம். அனைவரும் நாளைக்கு ஆஜராகி தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறி இன்று வரவிருந்த வழக்குகள் அனைத்தையும் நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Tags : branch ,temple complex ,Tanjore ,Supreme Court , Court of Tanjore, Temple, case, tomorrow hearing, High Court Branch order
× RELATED குற்றால அருவிக்கு வரும்...