மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம் ஒன்றியங்களில் 144 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் கோட்டூர், நீடாமங்கலம் ஒன்றி யங்களில் உள்ள 144 ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கோட்டூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 49 ஊராட்சிகளில் 40 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் பொது தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. இதில் புழுதிக்குடி ஊராட்சியில் மட்டும் தீர்மானம் அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப் பட்டது. மீத முள்ள ஊராட்சிகளில் கிராம மக்களால் கொடுக்கப்பட்ட தீர்மானங்களை அதிகாரிகள் பெற்று கொண்டனர். ஆனால் கூட்ட புத்தகத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்க பட வில்லை என கூறப்படுகிறது.

மன்னார்குடி: மன்னார்குடி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 51 ஊராட்சிகளில் வடபாதி மங்கலம் , புள்ளமங்கலம், அரிச்சந்திர புரம், திருராமேஸ்வரம் உள்ளிட்ட. 35க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் பொது தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. இதில் மேலவாசல், சவளக்காரன், ராமாபுரம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பெற்று கொண்டு கூட்ட புத்தகத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்க பட வில்லை என கூறப்படுகிறது.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 44 ஊராட்சிகளில் எடக்கீழை யூர், முக்குளம் சாத்தனூர், வடுவூர், பரப்பன மேடு, பயித்தஞ்சேரி, ஒளிமதி, அனுமந்தபுரம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் பொது தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. இதில் எடக்கீழையூர், எடமேலையூர் உள்ளிட்ட 13 ஊராட்சிகளில் தீர்மானம் அதிகாரப் பூர்வமாக நிறைவேற்றப் பட்டது.

இதுகுறித்து நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட முக்குளம் சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் வீரா தேசபந்து கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொது தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளிடம் கொடுத்தோம். அவற்றை பெற்று கொண்ட அதிகாரிகள் தற்போது முதல் கூட்டம் என்பதால் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்றும் அடுத்தடுத்த கூட்டங்களில் தீர்மானம் நிறை வேற்றி கொள்ளலாம் என சமரசம் செய்வதில் தான் குறியாக இருந்தனர். எங்கள் உயிரை கொடுத்தேனும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகார திட்டங்களை எங்கள் கிராமங்களில் அனுமதி மாட்டோம் என கூறினார்.

Related Stories: