குடியரசு நாளை முன்னிட்டு 10 ரூபாய்க்கு மதிய உணவு: 'சிவ போஜனம்'என்ற திட்டம் மகாராஷ்டிராவில் தொடக்கம்

மும்பை: மகாராஷ்டிராவில் 10 ரூபாய்க்கு மதிய உணவு திட்டத்தை மாநில நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி  அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 71வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், குடியரசு நாளை முன்னிட்டு மகாராஷ்டிராவில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிவ போஜனம் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 10 ரூபாய்க்கு தாசம், பருப்பு, காய்கறி மற்றும் 2  சப்பாத்திகள் வழங்கப்படுகின்றன. முதற்கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகளில் உணவகம் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு உணவகத்தில் 500 பேருக்கு உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி  முதல் பிற்பகல் 2 மணி வரை உணவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த 3 மாதத்திற்கு 6.40 லட்சம் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மகாராஷ்டிரா மாநில நகர மேம்பாட்டுத்துறை மற்றும்  பொதுப்பணித்துறை ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்துள்ளார்.

Related Stories: