ஆக்ஸ்போர்ட் அகராதியின் 10-வது பதிப்பு வெளியீடு: ஆதார் உட்பட 26 புதிய இந்திய ஆங்கில சொற்களுக்கு இடம்....மகிழ்ச்சியில் இளைஞர்கள்

டெல்லி: ஆக்ஸ்போர்ட் அகராதியின் புதிய பதிப்பில் ஆதார் உட்பட 26 புதிய இந்திய ஆங்கில சொற்கள் இடம்பெற்றுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ( OUP ) உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக அச்சகம், மற்றும் கேம்பிரிட்ஜ்  யுனிவர்சிட்டி பிரஸ்ஸுக்குப் பிறகு இரண்டாவது பழமையானது. இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாகும். பல்கலைக்கழகம் 1480 ஆம் ஆண்டில் அச்சு வர்த்தகத்தில் ஈடுபட்டது, மேலும் பைபிள்கள், பிரார்த்தனை புத்தகங்கள்  மற்றும் அறிவார்ந்த படைப்புகளின் முக்கிய அச்சுப்பொறியாக வளர்ந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆங்கில அகராதியை தொகுத்து வழங்குகிறது. இந்த அகராதியின் 10 ஆவது பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பதிப்பில் 384 இந்திய ஆங்கில சொற்கள் உட்பட  1000க்கும் மேற்பட்ட புதிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பதிப்பில் 26 புதிய இந்திய ஆங்கில சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், ஆதார், ஷாடி, ஆன்டி, பஸ் ஸ்டேண்ட், டீம்டு யுனிவர்சிட்டி, எப்.ஐ.ஆர்., நான்-வெஜ், வீடியோ கிராப்  உள்ளிட்ட சொற்களும் அடங்கும். 26 புதிய சொற்களில் 22 சொற்கள் அச்சு பதிப்பிலும், எஞ்சிய 4 சொற்கள் டிஜிட்டல் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆதார் அட்டை:

இந்தியாவின் பல மொழிகளில் அடித்தளம் என்ற பொருள் கொண்ட ஆதார், இந்திய தனித்துவ அடையால ஆணையத்தால் வழங்கப்படும் தனித்துவ அடையாள எண்ணை குறிக்கும் சொல் ஆகும். இது வசிப்பாளர்களின் உடற்கூறுகளுடன்  இணைக்கப்பட்டிருப்பதால், அரசுத் திட்டங்களின் பயன்கள் முறைகேடான வழிகளில் சுரண்டப்படுவதற்கு காரணமான போலி மற்றும் புனையப்பட்ட அடையாளங்களை அடையாளம் கண்டுபிடித்து விடும் என்பதால் எந்த வசிப்பாளரும் போலி  அடையாள எண்ணை வைத்திருக்க முடியாது.

ஆதார் மூலமான அடையாளக் கண்டுபிடிப்பின் மூலம் போலிகள் நீக்கப்படுவதால் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு பிற தகுதியுடைய வசிப்பாளர்களுக்கு பயன்களை விரிவுபடுத்த அரசால் முடியும். ஆதார் அடையாள அட்டை என்பது  இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும்  தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: