குரூப்-4 தேர்வில் முறைகேடு அனைவருக்கும் தண்டனை தரவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா சார்பில் குடியரசு தின விழா மற்றும் நலிவுற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்ணாநகர் எம்எம்டிஏ காலனி வாட்டர் டேங்க் அருகில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாநகர் ராம்குமார் தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் டி.எம்.பிரபாகரன் வரவேற்றார். விழாவில், மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், துணை தலைவர்கள் கோவை தங்கம், வேணுகோபால், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.சீனிவாசன், அசோகன், மாநில நிர்வாகிகள் சக்திவடிவேல், விடியல் சேகர், ஜவஹர்பாபு, ரயில்வே ஞானசேகரன், முனவர் பாஷா, அனுராதா அபி, மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன், பிஜூ சாக்கோ, ரவிச்சந்திரன், அருண்குமார், சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

விழாவில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், “ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வின் விடைத்தாளில் முறைகேடு செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாகுபாடில்லாமல் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் “ என்றார்.

Related Stories: