×

கிருத்திகை, அமாவாசை, பிரதோஷம் இல்லை: அறநிலையத்துறை காலண்டரில் தமிழ் மாதமும் புறக்கணிப்பு: பக்தர்கள் கொந்தளிப்பு: அதிகாரிகளின் சதி என புகார்

சென்னை: அறநிலையத்துறை தயாரித்த காலண்டரில் தமிழ் மாதம் புறக்கணிக்கப்பட்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் காலண்டர் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்த காலண்டர்கள் முக்கிய கோயில்கள் மற்றும் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த காலண்டரில் ஒவ்வொரு முக்கிய கோயில்கள் மற்றும் அந்த கோயில்களின் சிறப்பு பற்றி எடுத்து கூறுகிறது. மேலும், முக்கியமான கோயில்களில் சுவாமி படங்களும் அந்த காலண்டரில் இடம் பெற்று இருக்கும். மேலும் பல்வேறு தகவல்கள் அடங்கி இருக்கும். எனவே தான், அந்த காலண்டரை பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். இதன் விலை 100 ஆகும். கடந்தாண்டு டிசம்பர் மாதம் அச்சடிக்கப்பட்டு கோயில்களில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், இந்தாண்டு காலண்டர் அச்சடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆங்கிலபுத்தாண்டு பிறந்து 25 நாட்களான நிலையில் தற்போது தான் அறநிலையத்துறை காலண்டரை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்தாண்டு 10 ஆயிரம் காலண்டர் வரை அச்சிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தாண்டு அச்சிடப்பட்ட காலண்டரில் தமிழ் மாதம் குறிப்பிடப்படவில்லை. மேலும், அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சஷ்டி விரதம், சங்கடஹர்த்தி தொடர்பாக எந்தவித குறிப்புகளும் அதில் இடம் பெறவில்லை. மேலும், இந்த காலண்டரில் கடந்தாண்டு படங்களை வைத்து டிசைன் கூட மாற்றம் செய்யாமல் அப்படியே அச்சடிக்கப்பட்டுள்ளது. இது, அறநிலையத்துறை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை ஊழியர் ஒருவர் கூறும் போது, ‘அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் சார்பில் இந்தாண்டு காலண்டர் தயாரிக்க மட்டுமே 50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த காலண்டரை டிசம்பர் மாதமே அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படும். ஆனால், இந்தாண்டு தாமதாக தான் அச்சிடப்பட்டுள்ளது. இந்த காலண்டரில் தமிழ் மாதம் இல்லை. முக்கிய கோயில்களின் நிகழ்வு மற்றும் பலன்கள் குறித்து எந்த குறிப்பும் இல்லை. பொதுவாக அறநிலையத்துறை காலண்டரை இது போன்ற தகவல்களை அறிந்து கொள்வதற்காக தான் வாங்குவார்கள். ஆனால், தற்போது இந்த தகவல்கள் இல்லை என்பதால் அதை மக்கள் வாங்குவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ என்றார்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், கோயில் காலண்டர்களில் அமாவாசை, திதி, கிருத்திகை போன்றவை மற்றும் கோயில் விழாக்கள் முக்கியம். அது புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மாதமே இல்லாமல் ஆங்கில மாதமான ஜனவரி-டிசம்பர் வரை ஆங்கிலத்தில் அச்சடிப்பட்டுள்ளது. பக்தர்களான எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. இது அதிகாரிகளின் திட்டமிட்ட சதி என்றனர்.

Tags : moon ,Tamil ,charity department , Krishna, new moon, no pomp, charity department, calendar, Tamil month, boycott
× RELATED சிம்மம்