×

சென்னை-திருச்சி சாலையில் கண்காணிப்பு கேமரா பணியை தீவிரப்படுத்த கோரிக்கை

சென்னை: சென்னை-திருச்சி சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், போக்குவரத்து விதிமீறல்களும் அதிக அளவில் நடக்கிறது. அப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இதைக்கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில் சாலையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 22 கோடி செலவில் கண்காணிப்பு கேமிராக பொருத்த திட்டமிடப்பட்டது. இந்த கேமிராக்கள் அனைத்தையும் இணைக்கும் வகையில் சென்னையில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் சீட்பெல்ட் அணியாமல் பயணித்தல், நிர்ணயம் செய்யப்பட்ட எடையை விட கூடுதல் எடையை ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல் உளளிட்ட விதிமீறல்களை கண்காணிக்க முடியும். 24 மணிநேரமும் இவை செயல்பாட்டில் இருக்கும். இந்நிலையில் இப்பணியானது தாமதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Trichy ,road ,Chennai , Demand , intensification , surveillance camera work , Chennai-Trichy road
× RELATED புதுக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு...