விளையாட்டு துளிகள்

* இங்கிலாந்து அணியுடன் ஜோகன்னஸ்பர்கில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில்  183 ரன்னுக்கு சுருண்டது. டி காக் 76, பிரிடோரியஸ் 37, எல்கர் 26 மாலன் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை  இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 5, ஸ்டோக்ஸ், வோக்ஸ் தலா 2, சாம் கரன் 1  விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 217 ரன் முன்னிலை பெற்றதால், தென் ஆப்ரிக்கா கடும் நெருக்கடியில்  சிக்கியுள்ளது.

Advertising
Advertising

* இந்தியா ஏ அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 5 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற நியூசிலாந்து ஏ அணி 2-1  என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து ஏ 50 ஓவரில் 270/7 (மார்க் சாப்மேன் 110*, டாட் ஆஸ்டில் 56,  பிளண்டெல் 37, பிலிப்ஸ் 35); இந்தியா ஏ 49.4 ஓவரில் 265 ரன் ஆல் அவுட் (இஷான் கிஷண் 71*, பிரித்வி 55, கெயிக்வாட் 44,  கேப்டன் அகர்வால் 24, அக்சர் பட்டேல் 32, விஜய் ஷங்கர் 19). கடைசி 3 வீரர்கள் கோல்டன் டக் அவுட்டானது தோல்விக்கு  காரணமாக அமைந்தது.

Related Stories: