பயனற்ற ஆழ்துளைக் கிணற்றை மழைநீர்சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதியயோசனை தமிழகத்தில் உதித்துள்ளது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

டெல்லி: பயனற்ற ஆழ்துளைக் கிணற்றை மழைநீர்சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதியயோசனை தமிழகத்தில் உதித்துள்ளது  என மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக  பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாடும் ‘மன் கி பாத்’ என்ற  நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி ஏற்பட்டு செய்திருந்தார். இந்தியாவின் பெரும்பான்மையாக 90% மக்களிடம் செல்லும்படியான ஊடகம் வானொலி  என்பதால்  தொலைக்காட்சியை தவிர்த்து வானொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. அகில இந்திய வானொலி  மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர்  தொடங்கினார். அப்போது முதல் மாதம் ஒரு முறை என கடந்த பிப்ரவரி வரை தொடர்ந்து 53 மன் கி பாத் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலுக்காக மன் கி பாத் நிகழ்ச்சிக்கு தடை ஏற்பட்டதாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கடைசி  நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தொடர்ந்து, மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அபார வெற்றி பெற்றதுடன் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றார். 2வது முறை பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, மீண்டும் ‘மன் கி  பாத்’ நிகழ்ச்சி மூலம் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் உரையாற்ற தொடங்கினார். இதனை தொடர்ந்து 2020 ம் ஆண்டின் முதல் மன்கி பாத் உரை நிகழ்ச்சி இன்று (26 ம் தேதி) நடைபெற்றது. அப்போது பேசிய அவர்; பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதிய யோசனை தமிழகத்தில் உதித்துள்ளது.

தமிழகத்தில் தோன்றியதுபோல் எண்ணற்ற யோசனைகள் புதிய இந்தியாவிற்கு வலுசேர்த்து வருகின்றன. எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை மூலம் தீர்வுகாண முடியாது. இந்திய வீரர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்றவர் யார் என்று கேட்டால் டேவிட் பெக்காம் என்று கூறுவீர்கள். அவரைப்போன்ற ஒருவர் கவுகாத்தியில் உள்ளார். இளைஞரான அவர் சைக்கிள் பந்தயத்தில் 200 மீட்டர் ஸ்பிரிண்ட் நிகழ்வில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை மூலம் தீர்வு காண முடியாது. இளைஞர்களின் விளையாட்டுதிறனை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய அளவில் கெலோ இந்திய பல்கலைகழக விளையாட்டு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதல் பதிப்பாக வரும் பிப்., 22 ம் தேதி முதல் மார்ச் 1 ம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கு கொள்ள உள்ளனர். இந்த போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: