பிப்.,8 ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் டெல்லியின் முன்னேற்றத்திற்கானது: கைலாஷ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: மீண்டும் முதல்வராகும் ஆசை தனக்கு இல்லை என்றும் டெல்லியின் முன்னேற்றத்திற்காக தான் வெற்றி பெற வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வருகிற பிப். 8ம் தேதி நடக்கவுள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த கடைசி நாளில், 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 800க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தம் 1,029 வேட்பாளர்களில் 187 பெண்கள். வேட்பு மனுக்களை நேற்றுடன் திரும்பப் பெறலாம். இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே ஒரு மும்முனை போட்டி நிலவுகிறது. பிப். 8ம் தேதி வாக்குப்பதிவும், பிப். 11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

டெல்லி: இறுதி வாக்காளர் பட்டியலில், 1.46 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாக்கு உரிமையை பயன்படுத்த தகுதியுடையவர்கள் எனவும் கூறியுள்ளது இந்நிலையில் ஆளும்கட்சியான ஆம்ஆத்மி, பாஜ., மற்றும் காங்., கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிரேட்டர் கைலாஷ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்; ஆம்ஆத்மி அரசு, பள்ளி மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த கடினமாக உழைத்துள்ளது. பிப்.,8 ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் டெல்லியின் முன்னேற்றத்திற்கானது.

தலைநகர் டெல்லியின் முன்னேற்றத்திற்காக ஓட்டுகளை பெற வேண்டுமே தவிர, எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசையில்லை என கூறினார். எங்களின் சிறிய அளவிலான பட்ஜெட்டில் 5 ஆண்டுகளில் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தின் பாதி அதிகாரம் வைத்திருக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு சிசிடிவி கூட பொருத்தப்படவில்லை. நிர்பயா நிதிகள் அனைத்தும் அமித்ஷாவிடம் இருக்கிறது; அதை வைத்து சில கேமராக்களை பொருத்தியிருக்க வேண்டும்” எனவும் கூறினார்.

Related Stories: