×

சீர்காழி அருகே பக்தர்கள் வெள்ளத்தில் 11 பெருமாள்கள் விடிய விடிய வீதியுலா

சீர்காழி: சீர்காழி அருகே நாங்கூரில் கருடசேவை உற்சவத்தையொட்டி 11 பெருமாள்கள் பக்தர்கள் வெள்ளத்தில் வீதியுலா நநைடபெற்றது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் 11 திவ்யதேசகோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் தை மாதத்தில் 11 கருடசேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு நாராயணப் பெருமாள், குடமாடுகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்மன் பெருமாள், வரதராஜன் பொருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய பெருமாள்கள் 11 பெருமாள்களும் நேற்று மணிமாட கோயில் மண்டபத்தில்; எழுந்தருளினர்.

பின்னர் இரவு 12 மணியளவில் மணவாள மாமூனிகள், திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினர். பின்பு பெருமாள்களை பற்றி பாடிய பாடல்களை பட்டாச்சாரியர்கள் மற்றும் பக்தர்களால் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தங்க கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும், மாமுனிக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகாதீபாராதனை நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு வழிபட்டனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்த 11 பெருமாள்களும் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் வீதியுலா வந்தனர். அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சாமிதரிசனம் செய்தனர்.

இதில் சீர்காழி எம்எல்ஏ பாரதி , சீர்காழி ஒன்றியக்குழுத்தலைவர் கமல ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டது. சீர்காழி டி.எஸ்.பி வந்தனா தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Devotees ,Sirkazhi ,streets ,magnates , Sirkazhi, 11 greats, vidula
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...