×

டிக்டாக் நட்பால் விபரீதம்: விபசாரத்திற்கு அழைத்ததால் பெண் தற்கொலை முயற்சி

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சத்யமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கடல்கன்னி(39) என்பவர் கடந்த 2 வருடங்களாக டிக் டாக் பதிவை செல்போன் மூலம் வெளியிட்டு வருகிறார். இவரது டிக் டாக் வீடியோக்களுக்கு 33 ஆயிரம் பாலோவர்ஸ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அறிவுரைகள், நல்ல கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் நல்ல பெயர் இருந்துள்ளது. இவரது கணவர் மனோகரன் இறந்து விட்டார். 3 குழந்தைகள் உள்ளனர். பெற்றோருடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் டிக் டாக் பதிவின் மூலம் நட்பாக பழகி வந்த விழுப்பிரத்தை சேர்ந்த லதா, சென்னையை சேர்ந்த கவிதா, சுமதி என்பவர்கள் கடல்கன்னிக்கு உதவுவது போல் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த நபருடன் பழகினால் உனது வீட்டை புதிதாக கட்டிட ரூ. 2 லட்சம் தருவார் என ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்தி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 இதனையடுத்து கடல்கன்னியை ஆசை வார்த்தை கூறி தவறாக விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன வேதனைக்கு ஆளான கடல்கன்னி நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது, அங்கிருந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சத்யமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடாநட்பால் நேர்ந்த விபரீதம்:   லதா, கவிதா, சுமதி ஆகியோர் டிக்டாக்கில் அவர்களது ஆபாச படத்தை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது இவர்களுடன் நட்பான கடல்கன்னிக்கு பிடிக்காததால் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆனால் அவற்றை அவர்கள் கேட்கவில்லை. இதனிடையே கடல்கன்னியின் வீட்டிற்கு வந்த லதா, கவிதா, சுமதி உள்ளிட்டோர் கடல்கன்னியின் ஏழ்மையை பார்த்து ஏன் இப்படி இருக்கிறார். நீ நாங்கள் சொல்வதை கேட்டால் பணம் கிடைக்கும் நன்றாக இருக்கலாம் என கூறியுள்ளனர். மேலும், ஒருவரின் எண்ணை தருகிறோம் அவர் சொல்வதை கேட்க வேண்டும் என கூறியுள்ளனர். அதனை புரிந்து கொண்ட கடல்கன்னி தவறான வழியில் வரும் பணம் தேவையில்லை. முடியாது என கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மூவரும் இதுபற்றி நீ யாரிடமும் சொல்ல கூடாது, டிக்டாக்கில் பதிவிட கூடாது எனவும், மேலும், ரூ. 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்கு அவர் தர முடியாது என கூறியதால், கடல்கன்னியின் படத்தை ஆபசமாக மார்பிங் செய்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், தொடர்ந்து கடல்கன்னியை போனில் தொடர்பு கொண்டு பணம் தரவேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளனர். இதனை கண்ட கடல்கன்னியின் பாலோவர்ஸ் நீங்களா இதுபோன்ற ஆபாச படங்களை போட்டுள்ளீர்கள் என கேட்டுள்ளனர். இதனால், வேதனையடைந்த கடல்கன்னி இதுகுறித்து, விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். உடனே நடவடிக்கை எடுக்காத போலீசார் நாளை வா என கூறி அனுப்பி உள்ளனர். தொடர்ந்து 3 பேரும் டார்ச்சர் கொடுத்ததால் கடல்கன்னி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 


Tags : Tidak Friendship Adultery ,suicide , Dicktock, adultery, female suicide attempt
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை