பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும். இதன்படி, சமூக சேவை, ஆன்மீகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியில் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உடுப்பி பெஜாவர் மடத்தின் ஜீயரான சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்ட 7  பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

சமூக நீதிக்கு எதிராக காந்திய வழியில் போராடி நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் பெற்றுத் தந்த தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், டிவிஎஸ் நிறுவன சேர்மன் வேணு சீனிவாசன், புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் மனோஜ் தாஸ், மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர்கள் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், எஸ்.ராமகிருஷ்ணன், பம்பாய் சகோதரிகள் உட்பட மொத்தம் 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் பலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், சமூக சேவகர்கள் கிருஷ்ணம்மாள், எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபர் வேணு சீனிவாசன், இசைக் கலைஞர்கள் லலிதா, சரோஜா, ஓவியர் மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி வாழ்த்து

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக தேர்வானவர்களுக்கு மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்து கூறினார். பத்ம பூஷன் விருது பெரும் வேணு சீனிவாசன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: