71-வது குடியரசு தினம்: குடியரசு தின விழாவில் எம்.ஐ.17 வி.5 ஹெலிகாப்டர்கள் ராஜபாதையில் மலர் தூவி அணிவகுப்பு

டெல்லி: டெல்லி ராஜபாதையில் 71-வது குடியரசு தினத்தை ஒட்டி தேசியக்கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றினார். குடியரசு தின விழாவில் எம்.ஐ.17 வி.5 ஹெலிகாப்டர்கள் ராஜபாதையில் மலர் தூவிக்கொண்டு அணிவகுத்து சென்றன. முதல் படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அஸித் தலைமை வகித்தார். டி-90 ராணுவ டாங்குகள் அணி வகுப்புக்கு ராணுவ அதிகாரி சன்னி சாகர் தலைமை வகித்து சென்ன்றார். ராணுவ டாங்குகள் தொடர்ந்து தனுஷ் பீரங்கி வண்டிகள் ராஜபாதையில் அணிவகுத்து சென்றன.

Related Stories: