குரூப் 4 தேர்வில் முறைகேடு ஊழலின் உச்சத்தில் அதிமுக ஆட்சி: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது கண்ணியத்துக்குரிய ஒன்று. அந்த இடத்தில் தேர்வு செய்பவர்கள் தான் நிர்வாகத்தை நடத்துவார்கள். இன்னும் சொல்லப்போனால் அரசை நடத்துவதே அவர்கள் தான். அங்கே இவ்வளவு முறைகேடு நடந்திருக்கிறது என்று சொன்னால் ஊழல் உச்சத்துக்கு போய் இருக்கும் ஆட்சி தான் அதிமுகவின் ஆட்சி. இதோடு மட்டுமல்லாமல் இதே போல இன்னொரு ஊழல் நடந்தது. குரூப் 1 தேர்வில் 85 பேர் உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். இந்த அரசு வந்தது. அந்த வழக்கை திரும்ப பெற்று விட்டார்கள். அந்த 85 அதிகாரிகள் தான் இப்போது உள்ளாட்சி தேர்தலில் பணியில் போட்டு இருக்கிறார்கள். ஊழல் பேர் வழி, தவறான வழியில் வருபவர்கள் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என்று நினைக்கின்றனர். அது இன்று முடிவுக்கு வந்துள்ளது. இதே போல அரசு ஊழியர்களும் இது போன்ற தவறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : AIADMK ,scandal ,RSS Secretary ,RS Bharathi ,DMK ,Group 4 , Group 4 selection scandal, corruption, AIADMK rule, DMK secretary RS Bharathi
× RELATED அதிமுக ஆட்சி மாநில நிதி நிர்வாகத்தில்...