மகளிர் கல்லூரி கிரிக்கெட்: எம்ஓபி வைஷ்ணவா சாம்பியன்

சென்னை: மகளிர் கல்லூரி களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், எம்ஓபி வைஷ்ணவா சாம்பியன் பட்டம் வென்றது. பாரதியார் அரசு பெண்கள் கல்லூரி 2வது இடம் பிடித்தது.  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவில் சென்னை சில்க் சிட்டி ரோட்டரி கிளப், டிவிஎஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடத்தியது. இதில் சென்னையிலுள்ள 8 பெண்கள் கல்லூரிகள் பங்கேற்றன. தொடர்ந்து 2 நாட்கள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் முதல் அரையிறுதியில், பாரதியார் அரசு பெண்கள் கல்லூரி 8 ரன் வித்தியாசத்தில் பெண்கள் கிறித்துவக் கல்லூரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில்  எம்ஓபி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி 9 விக்கெட் வித்தியாசத்தில் எஸ்ஐஈடி பெண்கள் கல்லூரியை வென்றது.

Advertising
Advertising

இறுதிப் போட்டியில், எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பாரதியார் அரசு பெண்கள் கல்லூரி 2வது இடம் பிடித்தது. இக்கல்லூரியின் கவுசல்யா தொடரின் சிறந்த வீராங்கனையாகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: