சென்னை மாவட்ட கேரம் ரமேஷ்பாபு சாம்பியன்

சென்னை: சென்னை மாவட்ட கேரம் சங்கம், கிராண்ட் ஸ்லாம் கேரம் அகாடமி இணைந்து 7வது கேரம் போட்டியை நடத்தின. வயது அடிப்படையில் ஆண்கள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டியில் யு-12 சிறுவர்கள் பிரிவில் எஸ்.மிஸ்பா, ஏ.அப்துல்லா, எஸ்.கோபிநாத் ஆகியோரும், சிறுமிகள் பிரிவில் சி.டெனினா, ஏ.காவியா, எஸ்.கவி பிரீத்தி ஆகியோரும் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.யு-14 சிறுவர்கள் பிரிவில் என்.மிதுன், ஏ.அப்துர் ரகீம், டி.செம்மொழி கவிபாரதி, சிறுமிகள் பிரிவில் எம்.காசிமா, டி.செம்மொழி தமிழ் எழில், எஸ்.பர்கத் நிஷா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை தட்டிச் சென்றனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கே.ரமேஷ் பாபு முதல் இடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் பிரிவில் அப்துல் ஆசீப் 2வது இடத்தையும், எஸ்.கவாஸ்கர் 3வது இடத்தையும் வென்றனர்.

Advertising
Advertising

ஆண்கள் இரட்டையர் பிரிவில் கே.ரமேஷ் பாபு - கே.பிரேம் குமார் இணை முதல் இடத்தைப் பிடித்தது.  ஜெ.செபாஸ்டின் - டி.குபேந்திர பாபு, டி.எம்.மூர்த்தி கிருஷ்ணன் - டி.ஷியாம் குமார் 2வது, 3வது இடத்தைப் பிடித்தனர். என்எம்எஸ் பிரிவில் எம்.ஜான்சன், ஏ.ரவிகாந்த் ஆகியோர் முதல் 2 இடங்களைக் கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு அரிமா சங்க துணை ஆளுநர்  வி.ரமேஷ் பாபு, கே.பிரித்வி குமார் ஆகியோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

Related Stories: