டிஇஎல்சி பள்ளிகளுக்கான தடகளம் பாண்டூர் பள்ளி சாம்பியன்

திருவள்ளூர்: தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் 101வது ஆண்டை முன்னிட்டு, டிஇஎல்சி மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி நடந்தது.  சென்னை  நேரு விளையாட்டு அரங்கில் நடந்த இந்தப் போட்டி யில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள டிஇஎல்சி பள்ளி மாணவ, மாணவிகள்  பங்கேற்றனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை, திருவள்ளூர் அடுத்த பாண்டூர் டிஇஎல்சி காபிஸ் மேல்நிலைப்பள்ளி  வென்று சாதனை படைத்தது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த 31 மாணவர்கள் போட்டியில் பங்கேற்று, 41 பதக்கங்களை வென்றனர்.

Advertising
Advertising

சாம்பியன்  கோப்பையை  பேராயர் டி.டேனியல் ஜெயராஜ், தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபை ஆலோசனை சங்கத்தின் செயலர் ஆ.மஹேர் ஆண்டனி, கல்விக்கழக தலைவர் டி.வில்பிரட் டேனியல், ஆலோசனை சங்க உறுப்பினர் க.ஆல்பர்ட் இன்பராஜ் ஆகியோர் வழங்கினர். டிஇஎல்சி காபிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் பாண்டூர் டிஇஎல்சி திருச்சபை ஆயர், பள்ளி தாளாளர் ஆ.டேவிட் தினகரன், தலைமை ஆசிரியை த.சத்தியவதி கிரீட்டா, ஆசிரியர் சங்க செயலர் ப.காபிரியேல் தமிழ்ச்செல்வன், உடற்கல்வி ஆசிரியர் செ.தமிழன்பன் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த வெற்றிக்கோப்பையை பெற்றுக்கொண்டனர்.

Related Stories: