டாடா நெக்ஸான் காரில் பிரத்யேக செயலி அறிமுகம்

எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் கார்களில் இருப்பது போன்று நேரடி இன்டர்நெட் வசதி மூலமாக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை அளிக்கும் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் டாடா நெக்ஸான் காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. டாடா இசெட் கனெக்ட் என்ற பெயரில் இப்புதிய செயலி குறிப்பிடப்படுகிறது. இந்த செயலியை ஸ்மார்ட்போன் மற்றும் காரின் இன்போடெயின்மென்ட் சாதனத்துடன் ரிமோட் முறையில் இணைத்துக்கொள்ள முடியும்.

காரின் பேட்டரியில் இருக்கும் சார்ஜர், எவ்வளவு தூரம் பயணிக்கலாம், இதுவரை எத்தனை முறை சார்ஜ் ஏற்றப்பட்டுள்ளது என்ற விபரம், அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் விபரங்களை ஸ்மார்ட்போன் செயலி மூலமாக பெற முடியும். மறுபுறத்தில் காரின் மின் மோட்டாரை ஸ்டார்ட் செய்வது, காரில் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே ரிமோட் முறையில் ஏசி சிஸ்டத்தை இயக்கி, காரின் கேபினில் குளிர்ச்சியான பின்னர் ஏறும் வசதிகளை பெற முடியும். கார் எங்கு இருக்கிறது என்ற தகவல், கார் சென்று கொண்டிருக்கும் வழித்தடம், காரின் விளக்குகளை ஸ்மார்ட்போன் மூலமாக இயக்கும் வசதி, காரை ரிமோட் முறையில் திறந்து மூடுவதற்கான வசதிகளையும் இந்த செயலி மூலமாகவே பெற முடியும்.

அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையம், டாடா மோட்டார்ஸ் சர்வீஸ் மையம் உள்ளிட்ட தகவல்களையும் இந்த செயலி மூலமாக துல்லியமாக பெற முடியும். ஒருவேளை கார் விபத்தில் சிக்கினால் இந்த செயலி தானியங்கி முறையில் அருகிலுள்ள அவசர மையங்கள் மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உறவினர் அல்லது நண்பர்களின் போன் நம்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கை செய்துவிடும். கார் திருடுபோனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர கால் சென்டரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், காரின் இயக்கத்தை தடுத்து நிறுத்தும் வசதியும் உள்ளது. காரின் இயக்கம் மற்றும் இதர விஷயங்கள் குறித்து உரிமையாளரின் மொபைல்போனுக்கு உடனுக்குடன் குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை செய்யும் வசதியும் இடம்பெற்றிருக்கிறது.

அத்துடன், காரின் வேகத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்லாமல் கட்டுப்படுத்த முடியும். குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் கார் செல்ல முடியாதவாறு கட்டுப்படுத்தும் ஜியோ பென்சிங் வசதிகளும் உள்ளன. கார் ஓட்டுபவரின் முறையையும், தொடர் கண்காணிக்கும் வசதியும் உள்ளது. முரட்டுத்தனமாக ஆக்சிலரேட்டர் கொடுப்பது மற்றும் பிரேக் பிடிப்பது என உடனுக்குடன் எச்சரிக்கும் வசதியும் உள்ளது. இந்த இசட் கனெக்ட் செயலி மிகவும் உன்னதமான விஷயமாகவும், உரிமையாளர்களுக்கு பல்வேறு விதத்திலும் கைகொடுக்கும் விதத்திலும் அமைந்துள்ளது.

Related Stories: