இந்தியா - பாக். இடையே சமரசம் செய்ய தயார் என்கிறது நேபாளம்

காத்மண்டு: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் சமரச முயற்சி எடுத்தனர். ஆனால்,  `இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். யாருடைய சமரசமும் தேவையில்லை’ என மத்திய அரசு உறுதியாக மறுத்து வருகிறது. இந்நிலையில், நேபாள அரசு வெளியிட்ட அறிக்கையில், `பேச்சுமூலம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண  இயலும். நாடுகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அதனை பேச்சு மூலம் தீர்க்க முடியும். தேவைப்பட்டால், இந்தியா, பாகிஸ்தான் பிரச்னையில் நேபாளம் மத்தியஸ்தராக இருக்கும். அனைத்து சூழல்களிலும் ஒன்றாக அமர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னை முடிந்துவிடும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: